தனது ரசிகரான மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து செல்பி எடுத்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்

இதையும் படியுங்கள் : ”ராமர் கோவில் கட்ட லக்னோ முஸ்லிம் அமைப்பு ஆதரவு”

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமத் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த வியாழக்கிழமையன்று சென்னை வந்தார். அவருடன் மனைவி டதின் பதுகா செரி ரோஸ்மா மன்சூரும் வந்துள்ளார். இந்த பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்த்தைப் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படி சிறப்பு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்திய சினிமாவின் ரசிகர்களான நஜீப்பும் அவரது மனைவியும் ரஜினியின் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள் : ”இந்தியாவில் 23 பல்கலைக்கழகங்கள், 279 தொழில்நுட்பக் கல்லூரிகள் போலியாக செயல்படுகின்றன”

Untitled
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் மலேசிய பிரதமர் நஜீப்பும் அவரது மனைவியும் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த், “என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்திற்கு வருகை தந்த மலேசிய பிரதமருக்கு நன்றி. கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மலேசியா அரசு எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி உதவியது” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : இன்டர்நெட்டைக் கிராமத்துக்குக் கொண்டு செல்லும் ஒஸாமா மன்ஸர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்