லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில், இன்று தனது 65 வது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நடிகர் கமல், தனது நீண்டகால நண்பர் ரஜினியின் தர்பார் போஸ்டரை வெளியிட்டார்.

அதே போன்று, மலையாளத்தில் மோகன் லாலும்,இந்தியில் சல்மான் கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர்.

மேலும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here