சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தில் காவல்ர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் இந்த சூழலில், இளைஞர்களைத் திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப்படக் கலைஞர்கள் ஒன்று கூடி, சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரைத் தாக்கினர். இந்தச் சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், காவல்ர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் அவர், எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும், அதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்தை, அருமைச் சகோதரர் ரஜினிகாந்த் என குறிப்பிட்டு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அதேபோன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”பொதுமக்களைப் பாதிக்கும் அளவிற்கு..சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவிற்கு…நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது… சரியானதே….” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: இவர்கள் சின்னக் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை – இணையத்தில் பொங்கிய நடிகை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்