கமல் அரசியலுக்கு வர துடிப்பது ஏன் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரரஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமலஹாசன், தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் உள்ளது என குற்றம் சாட்டினர். இதற்கு தமிழக அமைச்சர்கள் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், கமல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமலின் பேச்சுக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரரஜன், எத்தனை சமூக பிரச்னைகளுக்கு கமல் குரல் கொடுத்தார் என தெரியவில்லை என்றும், ஆனால் ரஜினி ஆரம்பத்தில் இருந்தே சமூக கருத்துக்களைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாணவி வளர்மதி கைது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் பாதுகாப்பிற்காக ஒருவரைக் கைது செய்தால் அதனை எதிர்ப்பததே எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள் : “துண்டுப் பிரசுரம் கொடுத்த வளர்மதி கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது”

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்