துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல்

0
325

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22-ஆம் தேதி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 48 பேரை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ரஜினி சென்றதால் மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு கருதி ஏராளமான போலீஸார் காவலுக்கு குவிக்கப்பட்டனர்.

முதன்முறையாக முக்கியமான விவகாரத்தில் மக்களை நேரில் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த் .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்