நடிகர் ரஜினிகாந்த் சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்காக ஆலோசித்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் அவர், ரஜினிகாந்த் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நினைப்பதாகவும், ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்றும் தெரிவித்தார். ரஜினிக்குப் பின்னால் நல்ல சக்திகள் கொண்ட அத்தனைப் பேரும் ஒன்று கூடுவார்கள் என்றார்.

இதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்