அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த மைக் பிரிடாஸ்கி என்பவர் செல்லப்பிராணியாக ‘லில் பாப்’ என்று பெயரிடப்பட்ட பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.

இந்த பூனை மற்ற பூனைகளை போல் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருந்ததால் சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமடைந்தது.

இந்த பூனை வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சினைகளோடு பிறந்திருந்தது. இதனால் இந்த பூனைக்கு ஒவ்வொரு பாதத்திலும் ஒரு விரல் கூடுதலாக இருந்தது.

அதோடு சரியான வளர்ச்சியுறாத தாடையாலும் பற்கள் இல்லாததாலும் நாக்கு எப்போதும் வெளியே நீட்டி கொண்டு இருக்கும். இத்தகைய தனித்தன்மையான தோற்றத்தால் ‘லில் பாப்’ சமூகவலைத்தளங்களில் பிரபலமடைந்தது. ‘லில் பாப்’ பூனையை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர்.

இதன் நட்சத்திர பிரபலத்தை கொண்டு, மைக் பிரிடாஸ்கி அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் ஊனமுற்ற பிற பூனைகளுக்கு உதவுவது உள்பட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டி வந்தார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ‘லில் பாப்’ பூனை நேற்று முன்தினம் இறந்து போனதாக மைக் பிரிடாஸ்கி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here