ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்பாராஜ்

0
203

கார்த்திக் சுப்பாராஜின் மெர்க்குரி தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியாகியிருக்கிறது. படம் தமிழகத்தில் வெளியாகாததற்கு அவர் தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மெர்க்குரி உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியிருக்கிறது. எனினும் என் மண்ணான தமிழகத்தில் வெளியாகாதது வருத்தத்தை தருகிறது. விரைவில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்து படம் உங்கள் பார்வைக்கு வரும்வரை பொறுத்திருநங்கள். பைரஸியை தவிர்த்திடுங்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருப்பவர், தமிழகத்தில் படம் வெளியாகாததற்கு, தமிழக ரசிகர்களிடம் இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

மெர்க்குரி படத்தில் வசனங்கள் கிடையாது. அதனால் எந்த மொழியிலும் படத்தை வெளியிடலாம். படத்தின் இந்திப் பதிப்பை தமிழகத்தில் வெளியிடுகிறோம் என்று கார்த்திக் சுப்பாராஜ் தரப்பு கேட்டிருக்கிறது. வசனம் இல்லாத படத்துக்கு ஏது இந்திப் பதிப்பு என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கறாராக மறுத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்