ரசிகனின் செருப்பை எடுத்து கொடுத்த விஜய்: நெகிழ்ச்சியான ரசிகர்கள் (வீடியோ)

0
395

எஸ்பிபி க்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது விஜய்யை பார்ப்பதற்கு அதிக அளவில் ரசிகர்கள் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் தவறி கீழேவும் விழுந்திருக்கிறார்கள். ரசிகர் ஒருவரது செருப்பும் தவறி விழுந்திருக்கிறது. விஜய் சற்றும் யோசிக்காமல் அதை கையில் எடுத்து கொடுத்திருக்கிறார். அதை வீடியோவில் பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் பலரும் அவரை பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள்.

பாடகர் எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா துறை நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர். எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்ற பிறகு அங்கு விஜய் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். விஜய்க்கு எஸ்பிபி பாடல்கள் பாடியது மட்டுமின்றி அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நேரில் வந்தது பற்றி சினிமா துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

மேலும் இது பற்றி பேசி இருக்கும் மேயாத மான் இயக்குனர் ரத்ன குமார், “கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரும் வர வேண்டாம் என அரசு கூறியிருக்கிறதோ என தற்போது வரை நினைத்தேன். ஆனால் விஜய் சாரை பார்த்த உடன் தான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என எனக்கு தெரிகிறது. தளபதி மீது அதிக மரியாதை இருக்கிறது” என கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here