ரக்கட் மற்றும் ஆப்-ரோடு வெர்ஷன்: 2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் அறிமுகம்

• Ford to introduce new Active variant of popular EcoSport small SUV, offering customers more rugged styling and enhanced versatility

0
97

சர்வதேச சந்தையில் 2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் தற்சமயம் விற்பனையாகும் இகோஸ்போர்ட் மாடலின் ரக்கட் மற்றும் ஆப்-ரோடு வெர்ஷன் ஆகும்.

புதிய மாடல் சற்றே உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. இதுதவிர புதிய இகோஸ்போர்ட் தோற்றத்தில்
மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு மாற்றங்கள்  மாடலுக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது.

புதிய மாடல் வீல் ஆர்ச், பம்ப்பர்களில் பிளாக் கிளாடிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 17 இன்ச் டூயல்டோன் அலாய் வீல்கள், பக்கவாட்டில் ஆக்விட் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.

2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடலில் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 125 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

00011 00012 00013 00014 00015 00016 00017 00018 00019

ஆக்டிவ் சீரிசில் இணையும் புதிய எஸ்யுவி மாடலாக புதிய இகோஸ்போர்ட் இருக்கிறது. முன்னதாக பியஸ்டா, போகஸ் போன்ற ஹேட்ச்பேக் மாடல்களில் ஆக்டிவ் பிராண்டிங் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here