தமிழ், தெலுங்கில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் முதல்முறையாக இந்திக்கு சென்றுள்ளார். அதனால் துணிச்சலான கேள்விகளை சாதாரணமாக எதிர்கொள்ளும் பக்குவம் கூடியிருக்கிறது.

உங்களை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மூன்று நிபந்தனைகளை பதிலாக தந்திருக்கிறார் ப்ரீத் சிங்.

  1. ஆறடிக்கு மேல் உயரம் கொண்டவராக இருக்க வேண்டும். காரணம் ரகுல் ப்ரீத் சிங் உயரமானவர். மேலும் உயரமான ஆண்களையே பொதுவாக பெண்களுக்கு பிடிக்குமாம்.
  2. தினசரி வேலைக்கு போய்விட்டு வருகிறவராக இருக்கக் கூடாதாம். வாழ்க்கையில் ஏதாவது ஃபேஷன் உடையவராக இருக்க வேண்டுமாம். 
  3. ஜோவியலாக, உண்மையாக சரியாகச் சொன்னால் ரகுல் ப்ரீத் சிங்கை போல் இருக்க வேண்டுமாம்.

இந்த மூன்று தகுதிகளும் குறையாத பேங்க் பேலன்ஸும் இருந்தால் ரகுல் ப்ரீத் சிங்குக்கு நீங்களும் ஒரு அப்ளிகேஷன் போட்டுப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here