இந்திய விமானப்படையின் ரகசிய ஆவண விவரங்களை பாகிஸ்தான் உளவுத்துறையினருக்குக் கொடுத்ததாக விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா என்பவரை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய விமானப் படை அதிகாரியாக உள்ளவர். அருண் மார்வஹா (51), கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ (Pakistan’s Inter-Services Intelligence) நபர்களுடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அப்போது, இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கண்காணித்த, இந்திய விமானப்படையின் மத்திய பாதுகாப்பு மற்றும் விசாரணை குழு, கடந்த ஜன.31ஆம் தேதி, அவரிடம் விசாரணை நடத்தியது. இதனையடுத்து அருண் மார்வஹாவை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசாரிடம் கடந்த புதன்கிழமை, விமானப்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அருண் மார்வஹா மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார், அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அருண் மார்வஹாவை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

நன்றி: timesofindia

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்