ரஃபேல் விவகாரம் ; மக்களுக்குத் தெரியவரக்கூடாது என்று மத்திய அரசு வெளியிடாத அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன?

0
309

பேச்சு வார்த்தைக்  குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள்  மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம் . 

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற ரஃபேல் பேர ஒப்பந்த விசாரணையில், “சட்டத்திற்கு புறம்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் தீவிரமாக விசாரணை செய்யும்” என்று தீர்ப்பளித்தது. பின்னர் சீராய்வு மனுக்களை ஏற்று அதன்மீது தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது  .

மக்களுக்குத் தெரியவரக்கூடாது என்று மத்திய அரசு விரும்பிய அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன ?

1.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நவம்பர் 24, 2015 அன்று  எழுதிய முக்கிய குறிப்பு. அதில் பிரதமர் அலுவலகம் சார்பில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த மனோகர் பரிக்கருக்கு எழுதப்பட்டதாகும். பாதுகாப்புத் துறை செயலாளர் ஜி.மோகன் குமார் “பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு, இது போன்ற இணைபேர பேச்சை பிரதமர் அலுவலகம் தவிர்க்க வேண்டும்  ஏனென்றால் நம்முடைய பேரம் பேசும்  தன்மையை அவர்கள் குறைவாக மதிப்பிட்டு விடுவார்கள் என்று எழுதியுள்ளார்.

துணைச் செயலாளார் எஸ்.கே.ஷர்மா செயலாளர் மோகன் குமாருக்கு எழுதிய கடிதத்தில் “இந்திய பேரம்  பேசும் பேச்சுவார்த்தைக் குழுவில் இல்லாதவர்கள் நேரடியாக,  பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைப் பேச்சு வார்த்தை நடத்துவதை நிறுத்துமாறு நாம் பிரதமர் அலுவலகத்தில் முறையிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நம்முடைய பேச்சு வாந்த்தை குழுவினால் , எதிர்பார்ப்புகள் எட்டப்படாத பட்சத்தில் வேண்டுமானால் பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டுக் கொள்ளட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு விண்ணப்பங்களுக்கும் பதில் கூறும் வகையில் அப்போதைய  பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் என்ன எழுதினார் என்றால் –  பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிகாரிகளும், நடைபெறும் பேச்சுவார்த்தை  தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வருவதாக தெரிகிறது. ஐந்தாவது பத்தி அளவுக்கதிகமான பேசியதுபோல் இருக்கிறது. பாதுகாப்புத் துறை செயலாளர் இந்த பிரச்சனையை, பிரதமரின் செயலாளரிடம்  பேசி சரி செய்வார். 5வது பத்தி ஷர்மாவின் பார்வைக்கு என்று அவர் எழுதியிருந்தார். 

2. பாதுகாப்பு அமைச்சகம் – ஆகஸ்ட் 2016 எழுதிய குறிப்பு – தேசிய பாதுகாப்பு தலைவர் அஜித் டோவல் பாரீஸில் ரஃபேல் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளை 2016, ஜனவரி 12, 13 தேதிகளில் சந்தித்தார். இந்த குறிப்பை  பாதுகாப்பு அமைச்சகத்தின் விமானப் படை அதிகாரி எழுதியுள்ளார். பேச்சு வார்த்தை குழுவுக்கு நிகராக இணைப் பேச்சு வார்த்தை நடத்திய  அஜித் டோவலின் பேச்சு வார்த்தையால்   ‘சோவ்ரெய்ன் கேரன்டி’ என்று சொல்லப்படும் ‘இறையாண்மை ஒப்பந்தம்’ கிடையாது 

3. இந்திய பேரம்  பேசும் பேச்சுவார்த்தைக்  குழுவில் இடம் பெற்றிருந்த மூவர் தங்களின் மறுப்பு கடிதத்தை எழுதியுள்ளனர். ஜூன் 1, 2016 அன்று நடந்த நிகழ்வில் இந்த மறுப்பு அறிவிக்கப்பட்டது உறுதியானது. ஒரு குறிப்பிட்ட பேரத்தில் உள்ள 10 அம்சங்களை மறுத்துள்ளது இந்த மூவர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பின் பிறகு, மத்திய அமைச்சகம் தங்களின் கருத்தினை கூறும் போது, மனுதாரர்கள், வெளியான அறைகுறை ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய பாதுகாப்பு மற்றும் தேச நலன் தொடர்பான மதிப்பீடுகளை தவறாக சித்தகரிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மனுதாரர்கள் சமர்பித்திருக்கும் அந்த ஆதாரங்கள் யாவும் முழுமையடையாதவை என்றும் கூறியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு இணையாக, பிரதமர் அலுவலகம்  இணைப் பேச்சு வார்த்தை  நடத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அன்று செயல்பட்டது மற்றும் பேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.

https://indianexpress.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here