ரஃபேல் விவகாரம் ;காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் அனில் அம்பானி

0
361

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ5000 கோடிக் கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிகை மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளது .

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அனில் அம்பானியை அவமதித்து விட்டதாகவும், ரஃபேல் குறித்து நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை எழுதிய கட்டுரையும் அனில் அம்பானியைப் பற்றி அவதூறாக எழுதிவிட்டதாகவும்  கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.  

நாங்கள் கொடுத்த வழக்கினை வாபஸ் பெறுகிறோம் என்று அனில் அம்பானியின் வழக்கறிஞர் ராசேஷ் பரிக் கூறியுள்ளார். 

ரிலையன்ஸ் டிஃபென்ஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா & ரிலையன்ஸ் ஏரோ ஸ்டரக்சர் (Reliance Infrastructure and Reliance Aerostructure) நிறுவனங்கள் காங்கிரஸ் தலைவர்களான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா , உம்மன் சாண்டி, அசோக் சவான், அபிஷேக் மனு சிங்வி, சஞ்சய் நிரூபம், சுனில் ஜக்கார், சக்திசின் கோகில் மற்றும் சில பத்திரிகையாளர்கள், நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தது.   

நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிகையின் எடிட்டர் ஸாபர் அகா, விஸ்வதீபக் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here