ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் இன்று மக்களவையில் பேசிய அருண் ஜேட்லி ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வசனத்தை எடுத்து மேற்கோளாகக் காட்ட அது தவறான மேற்கோள் என்று திரிணமூல் எம்.பி.சவ்கத ராய் அவரைத் திருத்தினார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி விமர்சனத்தை எதிர்கொண்ட அருண் ஜேட்லி, “காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். அதில் பாண்ட் கூறுவார், ‘ஒரு விஷயம் முதல் முறையாக நடந்தால் அது சம்பவம், அதுவே இரு முறை நிகழ்ந்தால் அது தற்செயல், ஆனால் அதுவே 3ம் முறையும் நிகழ்ந்தால் அது சதி, காங்கிரஸ் தலைவர் செய்வது சதிதான்” என்று சாடினார்.

அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சவுகத ராய், அருண் ஜேட்லியின் தவறைச் சுட்டிக்காட்டி, சரியான வசனம் எதுவெனில், “ஒரு விஷயம் முதல் முறையாக  நிகழ்ந்தால் அது சம்பவம், அதுவே இருமுறை நிகழ்ந்தால் தற்செயல், ஆனால் அதுவே 3ம் முறையும் நிகழ்ந்தால் அது விரோதியின் செயல்” என்று திருத்தியதோடு, “ஜேட்லி உங்கள் நினைவு உங்களைத்

தோற்கடிக்கிறது, 3வது முறையும் நிகழ்ந்தால் அது விரோதியின் செயல் சதி அல்ல” என்றும் அவரை மடக்கினார்.
அதே போல் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலாந்தே என்ற பெயரை அருண் ஜேட்லி உச்சரித்த விதத்தையும் திரிணமூல் உறுப்பினர் கலாய்த்தார்.

ஆளும் பாஜக அரசு பாதுகாப்பு அமைச்சராக இல்லாத ஒருவரை, அதுவும் ராஜ்யசபா உறுப்பினரை தன் தரப்பு நியாயத்துக்காக மக்களவை விவாதத்துக்கு அழைத்து வந்திருப்பது விநோதம்தான் என்றும் சவுகத ராய் கிண்டல் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here