ரஃபேல் போர் விமானத்தின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு தவிர்த்து ஏன்? என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பி உள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய போது ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவானது அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவும், விலை பேச்சுவார்த்தை குழுவும் ஏன் மறைக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடி அளவில் வாங்கியது. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.1,670 கோடி அளவிற்கு விலை நிர்ணயித்து வாங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை சரியெனில், விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டது ஏன்? என்று கேள்வியெழுப்பிய ப. சிதம்பரம், இதுகுறித்து யாராவது விளக்குவார்களா? என்று கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here