ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில், மீண்டும் மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட விலையைவிட தற்போது அதிக விலை கொடுத்து ரஃபேல் விமானம் வாங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் ஒப்பந்த விலையை வெளியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது.

இதனிடையே, ரஃபேல் விமானம் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை விவரத்தை வெளியிட முடியாது என்றும், பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் இதில் அடங்கியிருப்பதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுதான் ஊழல் என்பதற்கான அர்த்தம் என்றார்.

arunjaitley

மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, கடந்த நான்கு வருடங்களாக மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிப்படத்தன்மையுடன் ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும் அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏகே அந்தோணி, இஸ்ரேல் நாட்டிடம் வாங்கப்பட்ட தொலைதூர ஏவுகணைகள் தொடர்பான விவரத்தை வெளியிட மறுத்தார் எனவும் பேசினார்.

rahul

இந்நிலையில் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மீண்டும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ” கடந்த நவம்பரில், ரஃபேல் விமானம் தொடர்பான விலை விவரத்தை வெளியிடுவேன் என பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியிருந்தார். இப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக விலையை வெளியிட முடியாது என்கிறார். அவர் தனது நிலையை மாற்றிக்கொள்ள காரணம் என்ன?. ஊழலுக்காகவா அல்லது பிரதமர் மோடியைக் காப்பாற்றுவதற்காகவா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here