2015 மார்ச் மாதத்தின் 4 வது வாரத்தில் , அதாவது பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம் என்று அறிவிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பாரீஸில் அமைந்திருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் வெஸ் லீ டிரியன் – இன் அலுவலகத்தில் அவருடைய அலோசகர்களை அனில் அம்பானி சந்தித்திருக்கிறார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிய வந்திருக்கிறது.

அந்த சந்திப்பின் போது பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் க்ளாட் மாலட் , தொழில் ஆலோசகர் கிறிஸ்டோபர் சாலமன் , தொழில்துறை விவகாரங்களுக்கான தொழில்நுட்ப ஆலோசகர் ஜெஃப்ரி பொகொட் ஆகியோரை சந்தித்தனர்.

தொழில் ஆலோசகர் கிறிஸ்டோபர் சாலமன், ஐரோப்பா பாதுகாப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் இந்த சந்திப்பைப் பற்றி குறிப்பிடும்போது ரகசியமானது, பாதுக்காக்கபட வேண்டியது என்றும் கூறியுள்ளார்.

சீக்கிரமே புரிந்தணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் கமர்ஷியல் ஹெலிகாப்டர்களை தயாரிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக அனில் அம்பானி தெரிவிக்கிறார்.

பிரன்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகத்துக்கு அனில் அம்பானி சென்றபோது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-11 தேதிகளில் பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேச பிரான்ஸுக்கு செல்வார் என்று தெரியும்.

பின்னர், ரஃபேல் போர்விமானங்களை வாங்க பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலந்தேயும் கூட்டு அறிக்கை வெளியிட்ட போது அம்பானியும் பிரதமரின் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் மார்ச் 28, 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் வெஸ் லீ டிரியனின் செய்தி தொடர்பாளருக்கு இமெயில் மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கேட்டபோது இன்னமும் பதில் வரவில்லை. அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய இமெயிலுக்கும் பதில் வரவில்லை.

2015, ஏப்ரம் 8 ஆம் தேதி வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் மீடியாவை சந்தித்த போது ரஃபேல் குறித்து எதுவும் பெரிதாக பேசவில்லை.

ரஃபேல் விசயத்தில் என் புரிதல் என்னவென்றால், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் , பிரான்ஸ் நிறூவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . இந்த பேச்சுவார்த்தையில் ஹெச்ஏஎல் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது நடந்துக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை. தலைவர்களின் சந்திப்பை பாதுகாப்பு அமைச்சகம் நடத்திக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையோடு ஒன்றாக பார்ப்பதில்லை. பேச்சுவார்த்தை வேறு மோடியின் பிரான்ஸ் பயணம் வேறு என்று கூறினார் ஜெய்சங்கர்.

பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் உரிமம் பெற்ற உற்பத்தியாளர். மோடியின் புதிய ஒப்ப்ந்தத்தில் ஹெச்ஏஎல் -க்கு எந்த பங்கும் இல்லை.

புதிய ஒப்பந்த்தத்தில் அனில் அம்பானியின் நிலையன்ஸ் குமுமம்தான் முக்கிய பங்குதாரர் . பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. ரஃபேல் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்கியது. இதன் மதிப்பு ரூ30000 கோடி . ஒப்பந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது என்றும் இதற்கு மத்திய அரசு உதவியுள்ளது என்றும் கூறப்பட்டது.

டஸ்ஸால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களும் இணைந்து கூட்டு நிறுவனம் டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தைத் துவங்கியது. (51 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் + 49 சதவீத பங்குகள் டஸ்ஸால்ட் ஏவியேஷன்). டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் தொழிற்சாலையை நாக்பூரில் ஆரம்பித்தது . இந்த கூட்டு நிறுவனத்தில் தற்போதுவரை ரூ40 கோடியை டஸ்ஸால்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது 5 வருடத்தில் ரூ400 கோடி ஆகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலந்தே குடியரசு தின சிறப்பு விருந்தினராக டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் 36 போர் விமானங்களை வாங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு ,இரண்டு நாட்களுக்கு முன்பு , அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஹாலந்தேயின் காதலியும் , நடிகையுமான ஜூலி கெய்ட்டுடன் படம் பண்ணும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

2016 ஜனவரி 24 ஆம் தேதி , ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் கையிட்டின் ரௌஜ் நிறுவனத்துடன் பிரஞ்ச் மொழி திரைப்படம் எடுக்கும் ஒப்பந்தத்தில் நுழைந்ததாக அறிவித்தது

2016 , ஜனவரி 26 ஆம் தேதி இரு நாடுகளும் 36 போர் விமானங்களை வாங்குவதறான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரைத்ததாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள்தான் தேர்வு செய்தோம் என்று கூறியது.

Courtesy : The Indian Express