ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 143 மில்லியன் யூரோ (ரூ.1124 கோடி) வரி தள்ளுபடி செய்த பிரான்ஸ் அரசு; பிரான்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தி

0
357

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு அனில் அம்பானியின் தொலைத் தொடர்பு குழுமத்துக்கு 143.7 மில்லியன் யூரோ வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரபல பிரான்ஸ்  நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் 36  ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் மோடி  ஒப்பந்தம் செய்த சில மாதங்களுக்குபின், பிரான்ஸில் செயல்பட்டுவந்த அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.1,124 கோடி(143.7 மில்லியன் யூரோ) வரித்தள்ளுபடி செய்துள்ளது பிரான்ஸ் அரசு.

இச்செய்தியை  பிரான்ஸின்  லே மாண்டே நாளிதழ்   வெளியிட்டுள்ளது 

தொழிலதிபர் அனில் அம்பானி பிரான்ஸில் ரிலையன்ஸ் அட்லான்டில் பிளாக் பிரான்ஸ் எனும் பெயரில் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2010-ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வரி குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரனை நடத்தியதில் ரூ.469(60 மில்லியன் யூரோ) கோடி வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், அந்த நிறுவனம், முதல் கட்டமாக ரூ.60 கோடி(7.6 மில்லியன் யூரோ) செலுத்த சம்மதித்தது . அதன்பின் கடந்த 2010 முதல் 2012-ஆம் ஆண்டுவரை மீண்டும் வரிசெலுத்தாமல் ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கிறது எனப் புகார் வரவே அப்போதும் பிரான்ஸ் அதிகாரிகள் நடத்தி விசாரணையில் ரூ.712 கோடி(91 மில்லியன் யூரோ) வரி செலுத்தாமல் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்குறைய ரூ.1182 கோடி(151 மில்லியன் யூரோ) வரி செலுத்தாமல் ரிலையன்ஸ் நிறுவனம் பிரான்ஸில் செயல்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கண்டுபிடித்து தெரிவித்தனர்.

இந்நிலையில்  2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தார். அங்கு பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில், 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய  ஒப்பந்தம் செய்தார்.

அதன்பிறகு  பிரான்ஸில் செயல்பட்டு வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு 143.7 மில்லியன் யூரோ வருமானவரி விலக்கு அளித்துள்ளது. 

அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1182 கோடி(15.1 கோடியூரோ)  வரி செலுத்த வேண்டிய நிலையில், வெறும் ரூ.57 கோடி(73லட்சம் யூரோ) மட்டும் செலுத்தக் கூறிவிட்டு, ரூ.1,124 கோடியை(14.37 கோடியூரோ) பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது  என்று லே மாண்டே  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ1182 கோடி (151 மில்லியன் யூரோ)  வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலையன்ஸ் ஃபிளாக் அட்லான்டிக் பிரான்ஸ் நிறுவனம், பிரான்ஸ் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ரூ57 கோடி (73 மில்லியன் யூரோ) வரி செலுத்த கூறிவிட்டு ரூ.1,124 கோடியை(143.7 மில்லியன் யூரோ) பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது  என்று லே மாண்டே பத்திரிகை செய்தி கூறுகிறது . 

இவ்வாறு அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு வரித்தள்ளுபடி செய்தது அக்டோபர் 2015 இல்தான் அதாவது பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த காலகட்டங்களில்தான் என்று பிரான்ஸ் பத்திரிகை லே மாண்டே செய்தி தெரிவிக்கிறது . 

https://www.indiatoday.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here