பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலந்தே குடியரசு தின சிறப்பு விருந்தினராக டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் 36 போர் விமானங்களை வாங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு ,இரண்டு நாட்களுக்கு முன்பு , அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஹாலந்தேயின் காதலியும் , நடிகையுமான ஜூலி கெய்ட்டுடன் படம் பண்ணும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .

5

அதே ஆண்டின் கடைசியில் ரூ 59000 கோடி ரஃபேல் ஒப்பந்தத்தை செயல்படுத்தி தரும் நிறுவனமாக அம்பானியின் டிசால்ட் ரெலையன்ஸ் ஏரோஸ்பேஸ் மாறியது . அதாவது ரஃபேல் விமானங்களை தயாரிக்க உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் கூட்டணியை தொடங்கியது ரிலையன்ஸ் டிபென்ஸ். டிசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் 51 சதவீதம் பங்கையும் , ரஃபேல் விமானங்கள் தயாரிக்கும் டிசால்ட் ஏவியேசன் 49 சதவீதம் பங்கும் வைத்திருக்கிறது .

2016 ஜனவரி 24 ஆம் தேதி , ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் கையிட்டின் ரௌஜ் நிறுவனத்துடன் பிரஞ்ச் மொழி திரைப்படம் எடுக்கும் ஒப்பந்தத்தில் நுழைந்ததாக அறிவித்தது

2016 , ஜனவரி 26 ஆம் தேதி இரு நாடுகளும் 36 போர் விமானங்களை வாங்குவதறான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த 2 நாடுகளுக்கான ஒப்பந்தம் ஹாலந்நின் இந்திய வருகையின் போது கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நிதி சிக்கல்கள் காரணமாக தாமதமானது.

அதன் பிறகு டஸ்ஸால்ட் ஏவியேசன் செயல் தலைவர் எரிக் ட்ராப்பியர் மற்றும் அம்பானியும் டிசால்ட் ரெலையன்ஸ் ஏரோஸ்பேஸ் உற்பத்தி பிரிவின் கட்டிடத்துக்கு பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லே மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவிந்தர ஃபட்னாவிஸ், இந்தியாவின் பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே செய்க்லெர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது .

6

பிரஞ்சு நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் செர்ஜ் ஹசனாவிஷியஸ் இயக்கிய படத்தைத் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உதவியது . இந்த படம் டிசம்பர் 20, 2017 ஆம் ஆண்டு டவுட் ல ஹௌட் என்ற பெயரில் வெளியானது .

98 நிமிடம் ஓடும் பிரஞ்ச் மொழி படமான டவுட் ல ஹௌட் ஐக்கிய அரபு அமீரகம், தைவான், லெபனான், பெல்ஜியம், எஸ்டோனியா, மற்றும் லட்வியா ஆகிய நாடுகளில் வெளியானது. இந்தியாவில் வெளியாகவில்லை .

டிஸ்ஸால்ட் மற்றும் ரிலையன்ஸ் இடையே நடந்த ஒப்பந்தம் அக்டோபர் 2016 இல் நடந்தது , அப்போது ஹாலந்தேதான் ஜனாதிபதியாக இருந்தார்.

36 போர் விமானங்களை வாங்கும் உடன்படிக்கை பற்றிய முதல் அறிவிப்பு ஹாலந்தே ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்திடப்பட்டது. ஹாலந்தே மே 2012 முதல் மே 2017 வரை பிரதமராக இருந்தார். ஹாலந்தேவின் காதலி ஜூலி கயேத் உடனான உறவு குறித்து ஜனவரி 2014 இல் மக்களுக்கு தெரிய வந்தது .

இந்த விவரங்கள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ரௌஜ் இண்டெர்நேஷ்னல் நிறுவனத்தை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட போது கேள்விகளை இமெயில் அனுப்ப கேட்டுக் கொண்டது ஆனால் அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் – ஐ தொடர்பு கொண்ட போது அவர்களும் பதிலளிக்கவில்லை.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவுக்கு தேவையான ரஃபேல் போர் விமானத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு மாற்றும் நிபந்தனையும் அதில் விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் சார்பில் விமானத்தை கொள்முதல் செய்து, தொழில்நுட்பத்தை கைமாற்றிக் கொள்ளும் வேலையை பெங்களூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் (HAL) -யிடம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தத்தை எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து பறித்து தனது நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றினார். இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, 126 -க்குப் பதிலாக முதல்கட்டமாக 36 போர்விமானங்கள் வாங்கப்படுகிறது.

மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு போர் விமானம் ரூ.540 கோடிக்கு கொள்முதல் செய்வது என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் தலா ரூ.1,600 கோடிக்கு அந்த விமானங்களை வாங்குகிறது. அதுமட்டுமன்றி, பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெடிடம் (ஹெச்ஏஎல்) பராமரிப்பு பணிகளை அளிக்காமல் தனியார் நிறுவனம் (ரிலையன்ஸ்) ஒன்றுக்கு அதற்கான பணிகளை அரசு வழங்கியுள்ளது.

Courtesy : The Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here