ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை இன்று நாடியுள்ளனர்.

இந்த மூவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

”பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதற்கு முகாந்திரங்கள் உள்ளன.

நாட்டின் உயர்ந்த மதிப்புமிக்க அரசு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதற்கு போதுமான அளவு முகாந்திரங்கள் உள்ளன. பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை தனியார் நிறுவனம் பயன் பெற உதவியுள்ளார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கடந்த 4-ம் தேசி சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் மனு அளித்தோம்.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ இயக்குநர் விசாரணை நடத்தி, தகவல்களைத் திரட்டுவது அறிந்ததும், சிபிஐ அமைப்புக்கு மறைமுகமாக,நேரடியான அழுத்தங்களை அரசு அளித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. சிபிஐ இயக்குநர், துணை இயக்குநர் திடீரென நேற்று இரவு திடீரென்று மாற்றப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஆதலால், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு மோடி அரசு நெருக்கடி அளிப்பதில் இருந்து தடுக்க வேண்டும்”.

இதற்கு முன்னதாக ரஃபேல் ஊழல் குறித்து முன்னாள் பாஜக அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, மற்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை சந்தித்து பேசியிருந்தார்கள் . இதனால் மோடி அரசு அதிருப்தி அடைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here