ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் அதன் இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா கேட்டிருந்தார். ரஃபேல் குறித்து சிபிஐ கேள்வி எழுப்பியதால் அதன் இயக்குநருக்கு நேற்று இரவு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாவலராக வேண்டும் என்று பிரதமர் வாக்குகளை சேகரிக்கிறார். ஆனால், பாதுகாவலர் திருட்டை செய்துள்ளார்.

விவசாயிகளின் கடன்களை 1 ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், இந்தியாவின் 15 முன்னணி தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடியை அவர் தள்ளுபடி செய்துள்ளார். கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் விவசாயிகள் தவறு செய்தவர்கள். அதே மிகப் பெரிய தொழிலதிபர்கள் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால், அவர்களுக்கு சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்பு அளிக்கப்படும். அவர்களுக்கு எந்த வகையில் உதவவேண்டும் என்று வங்கிகள் முன்வருகின்றன.

லலித் மோடி லண்டனில் இருக்கிறார். ஆனால், அவர் கோடிக்கணக்கான ரூபாயை உங்களது முதல்வரின் மகனுக்கு அனுப்புகிறார். விஜய் மல்லையா, நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லியை சந்தித்துவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். அருண் ஜெட்லி மகளின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் சோக்ஸி பணத்தை செலுத்தியிருக்கிறார்” என்றார்.

ரஃபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய சிபிஐ இயக்குநருக்கு தண்டனையாக கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டனர் என்று கூறினார்.

மேலும் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ரஃபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று சிபிஐ விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் சிபிஐ இயக்குநரான அலோக் வர்மா ரஃபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கத் துவங்கியிருந்தார். அவர் தற்போது வலுக்கட்டாயமாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். பிரதமரின் செய்தி மிகவும் தெளிவானது. ரஃபேல் ஊழல் தொடர்பாக யார் விசாரிக்க முயன்றாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள்; துடைத்தெறியப்படுவார்கள்.

56 இன்ச் மார்பு கொண்ட மோடி சட்டத்தை மீறியிருக்கிறார். ரஃபேல் ஒரு சூப்பர் ரேடார் கொண்ட ஒரு ஆபத்தான விமானம். நீங்கள் ஓட்டலாம் ஆனால் அதிலிருந்து ஒளிந்துக் கொள்ள முடியாது மோடி அவர்களே என்று பதிவிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here