யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் : பட்டம் வென்றார் கரோலினா மரின்

Thailand Open: Carolina Marin beat Taiwan's Tai Tzu-ying 21-9, 21-16 to win the women's singles title, while Denmark's Viktor Axelsen defeated Angus Long of Hong Kong 21-14, 21-14 in men's singles final.

0
161

தாய்லாந்தில் இரு சர்வதேச பாட்மிண்டன் போட்டிகள் நடைபெறுகின்றன. யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 12 முதல் 17 வரையும், டோயோடா தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 19 முதல் 24 வரையும் நடைபெறவுள்ளன.

இதில் பாங்காக்கில் நடைபெற்ற யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-9, 21-16 என்றநேர் செட் கணக்கில் 42 நிமிடங்களில்தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து மகுடம் சூடினார்.

ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்குசை(ஹாங்காங்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

பட்டம் வென்ற இருவருக்கும் தங்கப்பதக்கத்துடன் தலா ரூ.51 லட்சம் பரிசுத் தொகையும் கிடைத்தது.

அடுத்ததாக இதே பாங்காக்கில் டோயோட்டா தாய்லாந்து ஓபன்  சர்வதேச பேட்மிண்டன் தொடர் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியிலும் உலக சாம்பியன் இந்தியாவின்பி.வி.சிந்து, சாய்னா நோவால், கரோலினா மரின், தாய் ஜூ யிங், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here