யோகி ஆதித்யநாத் 72 மணிநேரம், மாயாவதி 48 மணிநேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

0
139

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை , தேர்தல் நடத்தை விமுறைகளை மீறிய காரணங்களுக்காக 3 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் . 

அதேபோல தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் 2 நாட்களுக்கு  தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் . 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள்மீது  என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய பிறகு இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது  

இந்தத் தடை ஏப்ரல் 16 (செவ்வாய்கிழமை) அதிகாலை 6 மணி முதல் அமல்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here