உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோராக்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

அதே போன்று புல்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து காலியாகவுள்ள இந்த நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிப்பு வெளியிட்டது. அதில், கோராக்பூர், புல்பூர் மற்றும் பீகாரின் அராரியா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், பீகாரின் ஜெகன்னாபாத் மற்றும் பாபூவா ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் மார்ச் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான முடிவுகள் மார்ச் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ராஜஸ்தானில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here