உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சரிபடுத்துவோம் என்று கூறி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்து மார்ச் 4, 2018 – உடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது . இந்த ஓராண்டில் மதச் சண்டைகள் ஒன்று கூட நிகழ்ந்ததில்லை என்று யோகி ஆதித்யநாத் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறிய 10 நாட்களில், மதவாதச் சண்டைகள் மற்றும் அது சார்ந்த மரணங்கள் உத்தர பிரதேசம் மாநிலத்தில் அதிகமாக நடைபெற்றிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் சமர்பித்தது . 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த மதவாத சண்டைகளில் 44 பேர் கொல்லப்பட்டிகின்றனர், 540 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு நடந்த மதவாத சண்டைகளில் 29 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் , 490 பேர் காயமடைந்திருப்பதாகவும் , 2015 ஆம் ஆண்டில் 22 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 410 பேர் காயமடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புலந்த்சாஹர், சரன்பூர் மதவாத மோதல்களில் யோகி ஆதித்யநாத் தலைமை வகிக்கும் இந்து யுவ வாஹினி அமைப்பும் உள்ளூர் பாஜக தொண்டர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். மதவாத மோதல்களில் ஈடுபட்ட இவர்களை எச்சரிக்கை செய்திருக்கிறது மாநில அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதுவும் இவர்கள் மீது எடுக்கப்படவில்லை .

ஜனவரி 16, 2018-ல் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர 160 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது என்றார். இது மட்டுமில்லாமல் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 10 மாதங்களில் 1200 போலீஸ் என்கவுன்ட்டர்கள் நடந்ததுதான் யோகி ஆதித்யநாத் அரசின் ‘சாதனை’. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான முக்கியமானவர்களில் ஒருவர் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் , இவர் 2017 மே மாததிலிருந்து சிறையில் இருக்கிறார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஜனநாயகத்துக்குள் இருக்கும் ஒரு பாசிச சட்டமாகும், இதில் கைது செய்யப்பட்டால் வக்கீல் கிடையாது, முறையீடு கிடையாது, வாதமும் கிடையாது கேள்வியும் கிடையாது கேட்பாரும் கிடையாது. உண்மையில் 1980-இல் இந்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது வெறும் தடுப்புக்காவல் சட்டமாகத்தான் இருந்தது. சமூக ஒழுங்கையும் மக்கள் அமைதி சில சமூக விரோத சக்திகளினால் பாதிக்கப்படகூடாது என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று ஆட்சியாளர்களின் பழிவாங்கும் கொடூர ஆயுதமாகியுள்ளது என்பதே உண்மை. இதில் அதிகபட்சம் 12 மாதங்கள் ஒருவரை உள்ளே வைக்க முடியும். மேலும் ஏன் எதற்கு என்ற காரணம் சொல்லாமல் யாரை வேண்டுமானாலும் 10 நாட்களுக்கு பிடித்து உள்ளே வைக்கவும் இந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் வழிவகுக்கும்.

The Wire என்ற ஆங்கில ஊடகம் ஒன்று உத்தரபிரதேசத்தின் 4 மாநிலங்களில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரின் குடும்பத்தினரைச் சந்தித்து பேட்டி கண்டது. வகுப்புவாத மோதல்களுக்குப் பிறகே இந்தக் கைதுகள் நடந்துள்ளன. இந்த மோதல்களில் இந்து யுவவாஹினி, இந்து சமாஜ் கட்சி, அகிலபாரத இந்து மகாசபை, ஆகியவற்றின் பங்களிப்பும் அதிகமே, ஆனால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது முஸ்லிம்கள் மீது மட்டுமே. முதலில் கைது செய்யப்பட்டனர், பிறகு இவர்களுக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் அளித்தது, ஆனால் போலீஸார் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் பிடித்து சிறை வைத்தனர். 2014 தேர்தல்களுக்கு முன்பு சிறுசிறு மதக் கலவரங்களைத் தூண்டி வாக்காளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதுகள் செய்து வாக்கு வங்கி அரசியல் செய்தார்கள் . அது போல 2019 தேர்தல் நெருங்கும் சமயத்திலும் இவ்வாறு கலவரங்கள் தூண்டப்படுகின்றன என்று பலரும் சந்தேகிக்கிறார்கள்.

போலீஸ் நிலையங்களில் மத கொண்டாட்டங்கள் நடந்தன என்று ஊடகங்களில் வெளிவந்த செய்திக்கு பதிலளித்து பேசிய உத்தர பிரதேச முதல்வர் சாலையில் நமாஸ் செய்வதைத் தடுக்காத நான் காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமியையும் தடுக்க முடியாது” என்று ஆகஸ்ட் 19, 2017 இல் பேசினார்

கன்வாரிகள் ஒலிபெருக்கிகள் மூலம் இடைஞ்சல் கொடுத்ததாக செய்திகள் வந்த போது அதற்கு பதிலளித்து பேசிய யோகி ஆதித்யநாத் இது சிவ பக்தியின் யாத்திரை இறுதி ஊர்வலம் அல்ல என்றும் கூறினார். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தலில் மத உணர்வுகளைப் புகுத்தும் யோகி ஆதித்யநாத் கலவரங்கள் தூண்டப்படும் மதக் கொண்டாட்டங்களைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டதாக கருதுகிறார்.

2017 அக்டோபர் 1-ஆம் தேதி மொகரம் பண்டிகையும் இந்துக்களின் சடங்கான துர்கா சிலைகளை நீரில் மூழ்கடிக்கிற தினமும் ஒரே தினத்தில் வந்தது . இரண்டு மதத்தினரின் ஊர்வலங்கள் ஒரே தினத்தில் வருவதால் மதச் சண்டைகள் நிகழலாம் என்று உளவுத்துறை அரசுக்கு தகவல் கொடுத்தது . துர்கா சிலைகளை நீரில் மூழ்கடிக்கும் நாட்களை மாற்றி அமைத்தது . அதற்காக பாஜக மம்தா பானர்ஜியை பாஜக விமர்சனம் செய்தது .

மாறாக உத்தர பிரதேசத்தில் 9 மாநிலங்களில் கான்பூர், பால்லியா, பிலிபித், கோண்டா, அம்பேத்கர் நகர், சம்பல், அலகாபாத், கௌசம்பி, குஷிநகர் போன்ற 9 மாநிலங்களில் சிறு சிறு கலவரங்கள் மூண்டன. முஸ்லிம்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர்.

2017 , அக்டோபர் 1 ஆம் தேதி கான்பூரில் இரு பெரிய கலவரங்கள் நிகழ்ந்தன. இந்த இரு கலவரங்களில் வன்முறையில் ஈடுபட்ட ராம் லல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உடனே விடுவிக்கப்பட்டார்கள் .

அதே நாள் ஜூகி பரம் பூர்வாவில் நடந்த முகரம் ஊர்வலத்தை இந்து சமாஜ் கட்சிய சேர்ந்தவர்கள் நிறுத்தினார்கள். அதனால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது . இந்த ஜூகி பரம் பூர்வாவில் தலித்துகளும் , முஸ்லிம்களும் வாழும் பகுதி . முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான இடம் தீவைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 57 பேர் கைது செய்யப்பட்டு பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் 3 பேரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்த உடனே அவர்கள் மீது தேசிய பாதுகாபு சட்டம் பாய்ந்தது .

பாஜக சட்டசபை மற்றும் பொதுத் தேர்தல்களில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குகள் குறைவாகவே பெற்றது.

ஆகஸ்ட் 2015-இல் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் மத அடிப்படையிலான மக்கள் தொகைக்கான 2011 கணக்கெடுப்பை வெளியிட்டது. இதன் மூலம் கடுமையான முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்களை இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டன, அதாவாது இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது, முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்பதே அந்தப் பிரச்சாரம். இதனையடுத்துதான் கர்வாப்ஸி போன்றவை உச்சம் பெற்றன.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று கூறுகின்றனர், “மனுவாதப் போக்காக உள்ளது, அதாவது ஆர்.எஸ்.எஸ்., இந்து தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம்களையும் தலித்துகளையும் இந்து ராஷ்ட்ரா திட்டத்தின் ஓர் அங்கமாகக் கருதவில்லை. 2019 தேர்தல்களுக்கு முன்னால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது தேசப் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தல் என்று காட்டி, மதரீதியாக வாக்குகளை குவிக்கவே இந்த உத்தி” என்று ராஜீவ் யாதவ் என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

Courtesy : The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here