உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற கடந்த பத்து மாதங்களில் 921 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் பத்து மாத ஆட்சி காலத்திற்குள் ஒன்பது நோட்டீஸ்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, உத்தரப் பிரதேச மாநிலம் அஸம்கார்க் பகுதியில் சன்னு சோன்கர் என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற கடந்த பத்து மாதங்களில் போலீசார் நடத்திய 921 என்கவுண்ட்டர்கள் சம்பவங்களில் இதுவரை 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த என்கவுண்ட்டர் சம்பவங்களில் 196 கிரிமினல்களும், 212 போலீசாரும் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று, ஆப்ரிக்க நாட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களைத் துன்புறித்திய சம்பவம் தொடர்பாக உரிய பதிலளிக்கும்படி கவுதம் புத்தா நகர் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியது.

அதேபோன்று, கோராக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், ரேபரேலியில் உள்ள என்.டி.பி.சி நிறுவனத்தின் ஆலையில் கொதிகலன் வெடித்து 34 பேர் உயிரிழந்த சம்பவம், டார்ச்லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டது உள்ளிட்ட ஒன்பது சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நன்றி: india.com

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here