யோகி ஆதித்யநாத்தை தோற்கடிப்பேன் – சந்திர சேகர் ஆசாத்

0
260

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதியநாத் கோரக்பூர் சதார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

“1971 ஆம் ஆண்டு கோரக்பூர் தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் டிஎன் சிங் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் கோரக்பூர் மக்கள் செய்வார்கள்” என்று பீம் ஆர்மி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 👇

கோரக்பூர் சதார் தொகுதியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சந்திர சேகர் ஆசாத் போட்டியிடுகிறார்.

இதையும் படியுங்கள் : 👇

பணவீக்கம், கொரோனா நோய்த்தொற்றைத் தவறாகக் கையாண்டது, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு என அனைத்து வகையிலும் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. ஆகவே “நான் நிச்சயம் யோகி ஆதித்யநாத்தை தோற்கடிப்பேன் என்று சந்திர சேகர் ஆசாத் கூறியுள்ளார்.

வழக்கறிஞரான சந்திரசேகர் ஆசாத், தலித் மக்கள் உரிமைகள் அமைப்பான பீம் ஆர்மியை துவங்கி அதன் தேசியத் தலைவராக உள்ளார். 2020 மார்ச் மாதம் சமாஜ் கட்சியை ஆசாத் உருவாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here