யுஜிசி வெளியிட்ட பட்டியலில் 23 போலிப் பல்கலைக்கழகங்கள்

0
339


நாடு முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லத்தக்கதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. 
அந்த வகையில் நிகழாண்டில் நாடு முழுவதும் இயங்கி வரும் 23 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன்படி, தலைநகர் டெல்லியில் 7 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. டெல்லி தரியாகஞ்ச் பகுதியில் உள்ள கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலைக்கழகம், டெல்லி

இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், விஸ்வகர்மா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், அதியாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மிகப் பல்கலைக்கழகம்) ஆகிய 7 பல்கலைக்கழகங்கள் போலியானவை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாராணசியில் சம்ஸ்க்ருத விஸ்வ வித்யாலயா, மஹிலா கிராம் விஸ்வ வித்யாலயா, காந்தி ஹிந்தி வித்யாபீடம், தேசிய எல்க்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச விஸ்வ வித்யாலயா, மஹராணா பிரதாப் சிக்ஷ நிகேதன் விஷ்வ வித்யாலயா, இந்திரபிரஸ்த சிக்ஷ பரிஷத் ஆகிய 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை.

ஒடிஸாவில் இயங்கி வரும் நவபாரத் சிக் ஷ பரிஷத், வடக்கு ஒடிஸா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக்கழகங்கள் போலியானவை. 

அதேபோல மேற்கு வங்கத்தில் இந்திய மாற்று மருந்துக்கான கல்வி நிறுவனம், மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் ஆகிய இரு பல்கலைக்கழகங்களும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ராஜா அரபிக் பல்கலைக்கழகமும், கர்நாடகத்தில் உள்ள பதகன்வி சர்கார் கல்விச் சமூகத்துக்கான சர்வதேச திறந்தநிலை பல்கலைக்கழகமும், கேரளம் கிஷாநத்தத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகமும், புதுச்சேரியில் இயங்கிவரும் ஸ்ரி போதி உயர்கல்வி அகாதெமி ஆகிய பல்கலைக்கழகங்கள் போலியானவை என யுஜிசி அறிவித்துள்ளது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here