மத்தியில் ஆட்சி நடத்தும் பாரதிய ஜனதா கட்சியினரால் தமிழகத்தில் காலூன்றக்கூட முடியாது என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், ”இன்றைக்கு யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் அரசியலுக்கு வருகிறார்கள். தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலில் தங்களால் ஈடுபட முடியாது, வெற்றி பெற முடியாது, இனி வளர்ச்சி பெற முடியாது என்று எண்ணி வருகிறார்கள். ஆனால், அரசியலுக்கு வருபவர்கள் என்ன சொல்லி வருகிறார்கள்? அவர்களுக்கு யார் தூண்டுகோலாக இருக்கிறார்கள்? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.” என்றார்.

மேலும் பேசிய அவர், மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக, எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களை எல்லாம் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக மதத்தை, ஜாதிகளை, கடவுளை எல்லாம் பயன்படுத்தி முழு மூச்சாக அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்