”யாரும் தலித்துகளைக் கொல்லவில்லை”: மீனா கந்தசாமி

1
1084

மும்பையில் நடந்த அனுராதா காந்தியின் ஏழாவது நினைவுச் சொற்பொழிவு மீனா கந்தசாமியால் வழங்கப்பட்டது; அனுராதா காந்தி ஜாதிய ஆதிக்கத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்ததற்காக அறியப்பட்டவர்; அவருடைய எழுத்துக்கள், நம் தேசத்தின் மனித விடுதலையை முன்னெடுத்துச் சென்றன. அதே வழியில் இப்போது பயணிப்பவர் மீனா கந்தசாமி; ஜிப்ஸி காட்டஸ் நாவலின் ஆசிரியை; ”டச்” என்பது உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். மீனாவின் உரையிலிருந்து:

1968ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று கீழவெண்மணியில் கொல்லப்பட்ட 44 பேரில் 23 பேர் குழந்தைகள்; இந்தப் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. ராமையாவின் குடிசையில் ஒதுங்கிய தலித் விவசாயக் கூலிகள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுவிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியது; முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடு தலித் கூலிகளை எரித்துக் கொல்வேன் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது பற்றிய வாக்குமூலங்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. நீதித்துறை தலித்துகளின் வாக்குமூலங்களை பிழையானதாக எடுத்துக்கொண்டதற்கு காரணம் என்ன?

மிராசுதார்கள், நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாக நீதித்துறை முடிவு செய்ததா? தீண்டத்தகாதவர்கள் கொல்லப்படும்போதுகூட நீதி அவர்களிடம் கருணையாக இல்லாதது ஏன்? ஜாதி இந்துப் பெருமையையும் நிலவுடமையாளர்களின் கவுரவத்தையும் அரசும் நீதித்துறையும் பாதுகாப்பது ஏன்? தலித்துகளுக்கு எதிரான படுகொலை வழக்குகளில் நீதித்துறை தலித்துகளுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததற்கு கீழவெண்மணி தொடங்கி நாடு முழுவதும் ஏராளமான வழக்குகளை மீனா கந்தசாமி உதாரணமாகக் காட்டினார்.

1999இல் மாஞ்சோலை போராட்டத்தில் 17 தலித்துகளின் படுகொலை, பரமக்குடியில் 2011இல் ஏழு தலித்துகளின் படுகொலை யாவுமே நீதி செய்யப்படாத படுகொலைகளாகவே இருக்கின்றன:
அவருடைய சொற்பொழிவின் முழு வீடியோ இங்கே:

1 கருத்து

ஒரு பதிலை விடவும்