ஒரு சிலருக்கு ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு சிலர், தேவைக்கேற்ப அவ்வப்போது கடன் வாங்கிக் கொள்வர். பிறகு பணம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடுவர். ஒரு சிலருக்கோ ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த கடனானது அவர்களுக்கு சங்கிலித் தொடர் போல கடன் சுமையை ஏற்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. 

அதற்கு காரணம், ஜாதகத்தில் 6-ம் இடத்தின் ஆதிக்கம்தான். லக்னாதிபதியும், 6-ம் இடத்திற்கு அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், அந்த நபருக்கு தொடர்ந்து கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் அந்தக் கடன் சுமையில் இருந்து விடுபட தாரா பலம் பெற்ற நாளில், தனாதிபதிக்குரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் பணப் புழக்கம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும்.

Courtesy:  maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here