காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என பெயரிடப்பட்டுள்ள 3 பெண் யானைகளை காஞ்சி காமகோடி பீடம் பராமரித்து வந்தது.

ஆனால், யானைகளை முறையாக பரமாரிக்கவில்லை எனக் கூறியும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியும், பவுண்டேஷன் இந்தியா என்ற அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற அமைப்பும் கடந்த 2016ஆம் ஆண்டு அந்த யானைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.


தற்போது, அந்த அமைப்புகள், விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோத யானைகள் முகாமை நடத்தி வருவதாகவும், யானைகளின் புகைப்படங்கள் மூலம் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடை பெறுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த முகாமை மூட உத்தரவிடக் கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு, அந்த 3 யானைகளையும் 4 வாரங்களில் திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டதுடன், யானைகளை இடமாற்றம் செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here