யமதீரா… ராஜமௌலியின் புதிய படம்?

0
122
Ram Charan , Rajamouli & Jr.NTR

பாகுபலிக்குப் பிறகு ராஜமௌலி என்ன படம் இயக்குகிறார் என்பதை அறிய இந்தியாவே ஆவலுடன் உள்ளது. அவர் அழைத்தால் அமீர் கானே ஓடிவரத் தயார். ஆனால், ராஜமௌலியோ சின்ன படமா பண்ணணும், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தரணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜமௌலியின் அடுத்தப் படமும் பாகுபலி போல் பிரமாண்டமாக மூன்று மொழிகளில் தயாராகிறது. ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை வைத்து ஏற்கனவே ராஜமௌலி தனித்தனியாக படம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரும் இணையும் படத்துக்கான கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், படத்துக்கு யமதீரா என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது என ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

விரைவில் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: நீதிபதி லோயா மரணம்: நீதியைக் கொல்லும் நாசகார சக்திகள் இவை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்