மோட்டரோலா நிறுவனம் தனது பிரபலமான 2018 ஜீ சீரிஸ்(G Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. மோட்டோ ஜீ6 பிளே(Moto G6 Play),மோட்டோ ஜீ6(Moto G6) மற்றும் மோட்டோ ஜீ6 ப்ளஸ்(Moto G6 Plus) ஆகிய மூன்று புதிய மாடல்களில் முதல் இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. சற்றே விலை அதிகமான மோட்டோ ஜீ6 ப்ளஸ்(Moto G6 Plus) இன்னும் ஏன் வெளியிடப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Moto-G6-Play

இவற்றில் மோட்டோ ஜீ6 பிளே(Moto G6 Play) மிகப்பெரிய பாட்டரி வசதியினைக் கொண்டிருக்கும். ஒரு யூபிஎஸ் போல் இந்த பாட்டரி( Non-removable Li-Ion 4000 mAh battery) பல மணி நேரங்கள் தாக்குப்பிடிக்க்க்கூடிய வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மோட்டோ ஜீ6 பிளே(Moto G6 Play) இவர்களுடைய மோட்டோ எக்ஸ்4(Moto X4) மொபைலை ஒத்த வடிவமைப்புடையதாக இருக்கிறது. இந்த ஜீ சீரிஸ் மொபைல் போன்களில் பின் பகுதி ஒரு மெல்லிய கண்ணாடியால்(slim glass back build ) மூடப்பட்டு அழகூட்டப்பட்டிருக்கிறது.

மோட்டோ ஜீ6 பிளே(Moto G6 Play) ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்(~75.2% screen-to-body ratio) கொண்டுள்ளது. இத்துடன் Qualcomm MSM8937 Snapdragon 430 P22 ஆக்டா-கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் கைரேகை சென்சார்(Fingerprint (rear-mounted)) 32 GB, 3 RAM or 16 GB, 2 GB RAM உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ(Android 8.1 (Oreo)) இயங்குதளம் மூலம் இயங்கும் மோட்டோ ஜீ6 பிளே(Moto G6 Play) ஸ்மார்ட்போன் கிளாஸ் மிரர் பேக் கொண்டுள்ளது.

De1Z8KKU0AAeYVD

மோட்டோ ஜீ6 பிளே(Moto G6 Play) ரூ 11,999/-க்கு கிடைக்கும்.

Moto-G6

மோட்டோ ஜீ6(Moto G6) ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்(~75.4% screen-to-body ratio) கொண்டுள்ளது. இத்துடன் Qualcomm SDM450 Snapdragon 450 ஆக்டா-கோர் சிப்செட், எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் கைரேகை சென்சார்(Fingerprint (front-mounted), 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி( Non-removable Li-Ion 3000 mAh), 64 GB, 4 GB RAM or
32 GB, 3 GB RAM உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

moto-g6-pdp-fullbleedhalf-screen-m

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ(Android 8.1 (Oreo)) இயங்குதளம் மூலம் இயங்கும் மோட்டோ ஜீ6(Moto G6) ஸ்மார்ட்போன் கிளாஸ் மிரர் பேக் கொண்டுள்ளது.

moto-g6-pdp-fullbleedhalf-camera-m

மோட்டோ ஜீ6(Moto G6) ரூ 13,999/-க்கு கிடைக்கும்.

motog6_main_1526881262814

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here