மோட்டோரோலா ரேசர் 2 : வெளியீட்டுத் தேதி மற்றும் விபரங்கள்

As per some recent reports, the new Motorola foldable phone would be called the Motorola Razr 5G that would come with a redesigned chip and include a new camera module.

0
206

மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யள்ளது. ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகியிருக்கும் மோட்டோ ரேசர் 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் குவிக் வியூ டிஸ்ப்ளே சார்ந்த புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

Ef-Sd-Ctn-VAAAeeh-E

முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ் 52 மோடெம் மூலம் 5ஜி வசதி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேமராவைப் பொறுத்தவரை சாம்சங்கின் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதில் கைரேகை சென்சார் கீழ்புறத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here