11255178231838

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பது தெரிய வருகிறது.

இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீடு எப்போது என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்கு தளத்துடன் வரும் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மற்றும் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், அட்ரினோ 508 GPU அம்சங்கள் வேகம் சேர்க்கின்றன.

மோட்டோ ஜி6 பிளஸ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியுடனும் 256 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

Motorola-Moto-G6-Plus-Cameras

இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ் எல்இடி ஃபிளாஷ், F/2.2 மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், F/2.2 கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் மற்றும் 3200 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இருக்கிறது.

சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 25,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி6 விலை ரூ.13,999 இல் துவங்குகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்