மோடி 2.0; ஜெய்ஶ்ரீராம் என கூறுமாறு பிரபல மருத்துவரை அச்சுறுத்திய கும்பல்

0
241

டெல்லியில்  பிரபல மருத்துவர் ஒருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறுமாறு ஒரு கும்பல் அச்சுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர், பிரபல மகளிர் நோய் மருத்துவர் அருண் கத்ரே. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்கப் புறப்பட்ட இவர்,  டெல்லியில் தங்கினார். ஜந்தர் மந்தர் அருகே ஒய்எம்சிஏ கட்டிடத்தில் தங்கியிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றார்.

இந்நிலையில் கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே 5-6 இளைஞர்களைக் கொண்ட ஒரு கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் எந்த மதம் என்று கேட்டு அவரை கேட்டுள்ளது.  பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறுமாறு வற்புறுத்தியுள்ளர். ஜெய் ஸ்ரீராம் என்று கத்ரே கூறியபோதும், சப்தமாக கூறுமாறு கேட்டுள்ளனர். சமீபத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவரான கத்ரே இதனால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார்.

இது குறித்து அருண் கத்ரே போலீஸில் புகார் அளிக்கவில்லை. தனது நண்பரான மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் இதை பகிர்ந்துகொண்டார். இதையடுத்து இச்சம்பவம் வெளியில் தெரியவந்தது.

இச்சம்பவத்தை அருண் பத்ரே உறுதி செய்தார். இதை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நோயாளிகளின் உரிமைகள், அனைவருக்கும் மருத்துவ வசதி, தனியார் மருத்துவ துறையை ஒழுங்கு செய்தல் ஆகியவற்றுக்காக போராடி வரும் பிரபல மருத்துவர் பிரகாஷ் ஆம்தேவுடன் இணைந்து அருண் கத்ரே பணியாற்றி வருகிறார். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனது மனைவி மருத்துவர் ஜோத்ஸ்னாவுடன் பல ஆண்டுகள் மருத்துவ சேவை செய்து வருகிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here