உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி அரம்கோ நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான 50 சதவிகித பங்குகளை வாங்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம், கடந்த புதன்கிழமையன்று (ஏப்.11), டெல்லியில் நடைபெற்ற சர்வதேச எரிசக்தி மன்ற (International Energy Forum) மாநாட்டில், பிரதமர் மோடியின் முன்னிலையில் கையெழுத்தானது. மாகாராஷ்டிரா சுத்திகரிப்பு நிலையத்தின் மீதமுள்ள 50 சதவிகித பங்குகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரொலியம், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கவுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்தால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா ஸ்வபிமான் கட்சி தலைவர் நாராயண் ரானே உள்ளிட்டோரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில நவநிர்மன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், மும்பையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ரோஹிங்கியா மக்களுக்கு உதவிய டெல்லிவாசிகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்