மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான் நடக்கும் என ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை, குஜராத் மாநில படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹர்திக் படேல் சனிக்கிழமை (நேற்று) சந்தித்துப் பேசினார்.

hardik

இதன் பின்னர் பெங்காலி மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “மோடி வரும் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், நாட்டில் அதிபர் ஆட்சிதான் நடக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும், நாட்டைப் பிளவுபடுத்த முயற்சித்து வரும் பாஜகவை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும்.” என்றார்.

மேலும் அவர், ”கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், நாட்டின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் பிரதமரே வேண்டும். மாறாக எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்காக 90 நிமிடங்கள் வரை செலவளித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் வேண்டாம்” என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here