’மோடி மீண்டும் பிரதமராக முடியாது’

0
1070

நரேந்திர மோடி மிண்டும் பிரதமராக முடியாது என திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தெரிக் ஓபிரியன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி திரிபுரா மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றியைப் பாரதிய ஜனதா கட்சியின் கொண்டாடி வருகின்றனர். மேலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தாமரை மலரும் எனவும் கூறிவருகின்றனர்.

derk

இந்நிலையில் இது குறித்து திரினாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிக் ஓபிரியன், ”பாரதிய ஜனதா கட்சி முதலில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லட்டும். அதன் பின்னர் மேற்கு வங்கம் பற்றி பேசலாம். பாரதிய ஜனதா கட்சியில் இலக்கு மேற்கு வங்கம் என்றால், எங்களுடைய இலக்கு டெல்லி செங்கோட்டை. அடுத்த 2019ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்ற மாட்டார். இந்தாண்டு உரையே கடைசியாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “15 நாட்களுக்கு முன்னர், ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் ஆல்வர் மக்களவைத் தொகுதியில் பாஜக 1.96 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது” என்றார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…