மோடியின் புதிய இந்தியாவில் தலித்துகளும், ஆதிவாசிகளும் ஏன் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்?

0
631

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலித்துகளுக்கு எதிரான கட்சிகள் என்று கூறி, அதுதொடர்பான வீடியோ ஒன்றை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (மே 6 ) டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பதிவிட்டு அதற்கு முகப்புரையாக பாஜக-ஆர்எஸ்எஸின் பாசிச கொள்கை “தலித்துகளும், ஆதிவாசிகளும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதே ஆகும் . பாஜக , ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர்கள் தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக எப்படியெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

அந்த வீடியோவில் , “பாஜக ஆட்சி காலத்தில் தீண்டாமையும், தலித்துகளுக்கு எதிரான வன்முறையும் கொடூரமான முறையில் நடந்துள்ளது. மோடி அவர்கள், “அனைவரும் ஒன்றிணைந்து’ என்ற ரீதியில் பேசி வருகிறார். ஆனால் அவரது ஆட்சியில்தான் தலித்துகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 12 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை நிகழ்வதுடன், தினமும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

திரு மோடியின் ஆட்சியின் வளர்ச்சியில் தலித்துகள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். எடியூரப்பாவுக்கு தலித்துகளின் ஓட்டு வேண்டும், ஒருமுறை தலித் ஒருவரின் வீட்டுக்கு சாப்பிட சென்ற எடியூரப்பா உணவை ஹோட்டலில் இருந்து வரவைத்து சாப்பிட்டது ; அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மாற்றும் என்று பாஜக அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே தெரிவித்தது; பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் காவலர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வின் போது SC, ST என்று நெஞ்சில் முத்திரை குத்தப்பட்டது ; உனாவில் தலித்துகளை சாட்டையால் அடித்தது ;

ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஒருவர் இட ஒதுக்கீட்டை அகற்றுவோம் என்று கூறுவது ; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவாத்
தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை ஆய்வுக்கு உள்ளாக்கவேண்டும் என்றூ கூறுவது ; பாஜகவின் மற்றொரு அமைச்சர் தலித்
வீட்டுக்கு சாப்பிட சென்று விட்டு உணவை ஹோட்டலில் இருந்து வரவைத்து சாப்பிட்டது ; யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் முஷார் பிரிவினர் வசிக்கும் கிராமத்திற்கு போவத்ற்கு முன் அவருடைய ஆட்கள்அம்மக்களுக்கு சோப் வாங்க காசு கொடுத்தது ; எல்லாவற்றுக்கும் மேலாக எஸ்சி,எஸ்டி சட்டத்தில் மாற்றம் ; போன்றவை இந்த வீடியோவில்
இடம்பெற்றிருக்கிறது. திரு மோடியின் புதிய இந்தியாவில் தலித்துகளும், ஆதிவாசிகளும் ஏன் தொடர்ந்து
துன்புறுத்தப்படுகின்றனர் என்று இந்த வீடியோவில் கேட்டுள்ளார்

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here