தலித் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் பிரதமர்மோடி. அதனால்தான், எஸ்,எஸ்டி வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பிரதமர் மோடி, தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் எதிரான மனநிலையைக் கொண்டவர். பாரதிய ஜனதா கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், ஆட்சியாளர்களின் மனதிலும் தலித்துகளுக்கு எந்தவிதமான இடமும் இல்லை.
பிரதமர் மோடியின் மனதில் தலித்துகளுக்கு இடம் இருந்திருந்தால், மோடியின் கொள்கைகளில் அது பிரதிபலித்திருக்கும் தலித்துகள் வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கும். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, ஒரு புத்தகத்தில் தலித்துகள் குறித்து என்ன எழுதினார் தெரியுமா? ஒரு தலித் வீட்டை சுத்தம் செய்தால் நல்லதாக உணர்கிறேன் என்று எழுதியிருந்தார். இதுதான் மோடி, இதுதான் மோடியின் சிந்தாந்தம், இதுதான் மோடியின் சிந்தனையாகும்.
காங்கிரஸ் ஒரு போதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகும் செயலில் ஈடுபடாது என்று நான் உறுதியளிக்கிறேன் என்றும் ராகுல் காந்தி கூறினார். எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் போன்றவை என்னுடைய தந்தை(ராஜிவ்காந்தி) ஆட்சியில் இருக்கும் போது, அவர் பிரதமாக இருக்கும் போது கொண்டுவரப்பட்டது.
ஆனால், அந்தச் சட்டங்களை எல்லாம் இப்போது நீர்த்துப்போகச் செய்ய பிரதமர் மோடி அனுமதிக்கிறார். எஸ்சி,எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உத்தரவுகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
.@INCIndia President @RahulGandhi along with CPM's @SitaramYechury at the protest over the SC/ST Atrocities Bill, at Jantar Mantar, Delhi. pic.twitter.com/Y4YpOzcdn9
— All India Mahila Congress (@MahilaCongress) August 9, 2018
இந்தத் தீர்ப்பை அளித்த ஏ.கே.கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நாட்டில் தலித்துகளின் நலன்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.
ஹைதராபாத்தில் பல்கலையில் படித்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு ஏராளமான மன அழுத்தங்கள் தரப்பட்டுள்ளன. தலித்துகள் நசுக்கப்படும் சூழல் இந்தியாவுக்குத் தேவையில்லை. இந்தியாவில் ஒவ்வொருவரும் வளர்ச்சி பெற வேண்டும், முன்னேற்றம் காணவேண்டும்.
தலித்துகளுக்கு எதிரான சிந்தனையுடன் இருக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்அமைப்புக்கும் எதிராக நாடே எழுந்து நிற்க வேண்டும்.
Congress president Rahul Gandhi joins SC/ST protest at Jantar Mantar. Listen in to what he said#ITVideo
More videos https://t.co/Nounxo6IKQ pic.twitter.com/4aEs1lp9fp— India Today (@IndiaToday) August 9, 2018
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஸ்லோகன் நல்ல எண்ணம், சரியான வளர்ச்சி .இதில் மோடிக்கு நல்ல எண்ணமே கிடையாது என்று மோடியை தாக்கி பேசினார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Courtesy : india today