ஊழல், பிரிவினை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை மோடி அரசில் உச்ச கட்டத்தில் இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டமானது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எம்.பிக்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசில் ஊழல் அதிகமாகியிருக்கிறது . பாஜக அரசு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது. பாஜக அரசின் போதிய திறமையின்மையால் பொருளாதாரத்தில் தோல்வியடைந்துள்ளது . இவை அனைத்தும் முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

ஆளும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு கோப அலை காணப்படுகிறது. எனவே நமது கட்சி எம்.பிக்கள் கடுமையாக உழைத்து, பொதுமக்களுக்கு ‘நல்ல நாள்’ விரைவில் வருமென்ற மோடியின் பொய் உறுதிமொழிக்கு ஒரு நல்ல மாற்று தர வேண்டும்.

ஜனநாயகம் மற்றும் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கும், சர்வாதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை ஊக்குவிக்கும் கட்சிகளுக்குமிடையேயான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய பெரும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது.

அரசியலமைப்பின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் வெறுப்பு, பிரிவினை மற்றும் வன்முறை சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நம் நாட்டு விவசாயிகள், இளைஞர்கள், மற்றும் விலைவாசி அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட சாதாரண குடும்பங்கள் ஆகியோரின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். மேலும் பெண்களின் பாதுகாப்பையும் , தலித் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசிய ராகுல் காந்தி பீகார் முசாபர்புர் காப்பகத்தில் 30க்கும் மேலான சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்காமல் பாஜக அரசும், பாஜக ஆதரவுடன் ஆளும் மாநில அரசும் காப்பாற்றுகிறது .

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாகியும் மிகவும் மெதுவான ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னை தேர்ந்தெடுத்தால் நான் உங்களுக்கு வாழ்க்கையின் சிறந்த மற்றும் மிக வசதியான பயண அனுபவத்தை தருவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் மோடியின் 4 ஆண்டு ஆட்சிக் காலம் , ஒரு சர்வாதிகாரி, திமிர்பிடித்த, தகுதியற்ற டிரைவர் ஓட்டும் ரயிலில் பயணம் செய்த அனுபவத்தைத் தான் மக்களுக்கு கொடுத்திருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாகவே மோடி அரசு இந்த 4 ஆண்டு காலம் இருந்து வந்திருக்கிறது.

மோடியின் விபத்தாகவிருக்கும் மந்திர ரயிலில் மீண்டும் பயணிக்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. ஆர் எஸ் எஸ் , பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா நிறுவனங்களிலும் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்