மோடி குறித்து அவதூறு பேச்சு : ராகுல் காந்திக்கு நேரில் ஆஜராக ராஞ்சி நீதிமன்றம் சம்மன்

0
206

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ராஞ்சி சிவில் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் மோராபாத் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

Getty-Images-910612922-1-696x474

அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலாளி என அழைத்துக் கொள்கிறார். நாட்டில் ஊழலற்ற ஆட்சி, வேலை வாய்ப்பு என பல பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதிய அளித்து ஏமாற்றி விட்டார். நாட்டு மக்கள் அனைவரையும, ஒரு காவலாளி அவமானப்படுத்தி தற்போது, ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற நிலைக்கு தரம் தாழ்ந்து விட்டார் என விமர்சித்துப் பேசினார்.

இதையடுத்து, பிரதமர் மோடியை விமர்சித்து அவதூறாக பேசியதாக ராஞ்சி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ராஞ்சி சிவில் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

——————————————————————————–
————————————————————-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here