புத்தாண்டு தினம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்பேட்டியின் போது விவசாய கடன் , சர்ஜிக்கல் ஸ்டிரைக் , மக்களவைத் தேர்தலுக்காக இணையும் எதிர் கட்சிகள் , ராமர் கோயில், பணமதிப்பிழப்பு பற்றி பலவற்றைப் பற்றி பேசினார்.

ராமர் கோயில் குறித்து பேசும் போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பிறகே அரசு தனது பணியை தொடங்க முடியும். அதன் பிறகே சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி கூறினார்.

பணமதிப்பிழப்பு பற்றி கூறும் போது நாங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் செய்வதற்கு ஓராண்டு முன்னரே, யாராவது கருப்புப் பணம் வைத்திருந்தால் அதை இப்போதே முறையாக ஒப்படைத்து விடுங்கள், விளைவுகளிலிருந்து தப்பிப்பீர்கள் என்று அறிவித்தோம்.

கருப்புப் பணத்தைப் பதுக்கியிருந்த பலர், மோடியும் மற்றவர்கள் போல சொன்னதைச் செய்யமாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால், நடந்தது வேறு’ என்று விளக்கம் அளித்தார்.

பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடங்கள், பத்திரிக்கைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரது பேட்டி என்பது ‘நான்’, ‘எனது’, ‘எனக்கு’, ‘எனது செயல்பாடு’ இவை மட்டும் தான் உள்ளன. தன்னைச் சுற்றி மட்டுமே அவர் அரசியல் செய்கிறார்.

அவரது பேட்டியில் தான் என்கிற ஆணவத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். நியாயமான கேள்விகளுக்கு, மக்கள் படும் அவதிகளுக்கு, பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை என்று இந்தப் பேட்டிக் குறித்து காங்கிரஸ் கூறியது .

பிரதமரின் பேட்டியை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

அந்த பேட்டியில் மோடி எத்தனை முறை ‘நான்’ என்று குறிப்பிட்டார் என்று கவனித்தீர்களா என்று மிரிணாள் பாண்டே பதிவிட்டுள்ளார்.

மோடியின் பதில்கள் எல்லாமே மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாகவே இருந்தது . கேள்விகள் இன்னும் கடுமையானதாக இருந்திருக்கலாம். மோடிக்கு பதில் எழுதி கொடுத்த கதாசிரியர் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். பேட்டியாளர் எதிர் கேள்விகள் கேட்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று துருவ் ரதி பதிவிட்டுள்ளார்.

மோடியின் அளித்த பேட்டியைப் பார்த்தபோது நிரவ் மோடி பேட்டியளித்தது போல் இருந்தது என்று அதுல் கத்ரி பதிவிட்டுள்ளார் .

மோடி அளித்த பேட்டியின் ரகசியம் என்று கீழே இருக்கும் ஒளிப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

பேட்டிக்கு முன்னமே மோடி பதிலை அளித்துவிட்டார், அப்பதில்களுக்கு ஏஎன்ஐ கேள்விகளை தயாரித்திருக்கிறது என்று ஜாய் பதிவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து மனித உயிர்களுக்கு இந்திய நாட்டில் மதிப்பிருக்கிறதா? என்று மொயின் நாஷ் பதிவிட்டுள்ளார்.

விளையாட்டில் நாம் பல ஜோடிகளை பார்த்திருக்கிறோம்

சேவாகும் சச்சினும் , கங்குலியும், டிராவிட்டும், ஸ்மிதாவும், மோடியும், மோடி பேட்டியின்போது சில இடங்களில் சறுக்கியபோது ஸ்மிதா அதை சரி செய்தார் என்று ரோஷன் ராய் பதிவிட்டுள்ளார்

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here