ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் டஸ்ஸால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் கூறியிருக்கிறது . பிரான்ஸ் மீடியா வெளியிட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பலத்த சர்ச்சையை உருவாக்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி ஊழல்வாதிதான் என்றும் மோடி அனில் அம்பானிக்கே பிரதமர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை புலனாய்வு இதழான மீடியாபார்ட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதிலிருந்து பிரதமர் மோடி ஊழல்வாதி என்று தெரிகிறது. திரும்பவும் நான் சொல்கிறேன் மோடி ஒரு ஊழல்வாதி , ஊழலை ஒழிக்க பாடுபடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே மோடி ஊழலுக்கு துணைபோயிருக்கிறார் என்று ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

‘ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில், அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்கப் பிரதமர் மோடி உதவியுள்ளார்.

ரஃபேல் போர் விமானத்தில் நடந்துள்ள ஊழல்களை மூடி மறைப்பதற்காகத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இல்லாவிட்டால், பிரான்ஸ் நாட்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீரென பயணம் செய்ய காரணம் என்ன? அதற்கான அவசரம் என்ன இப்போது இருக்கிறது?.

மோடி நமக்கு எல்லாம் பிரதமர் இல்லை அவர் அனில் அம்பானிக்குதான் பிரதமர் .

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here