நாட்டின் 73 சவிகித சொத்து ஒரு சதவிகித மக்களிடம் சென்றது குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம், இந்திய மக்களின் வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வொன்றை நடத்தியது. அதில், இந்தியாவின் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவிகித கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு ஆய்வின்படி, இந்தியாவில் ஒரு சதவீத மக்களிடம், நாட்டிலுள்ள 58 சதவிகித சொத்துக்கள் இருந்ததாகவும், அது தற்போது 73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த ஒரு சதவிகித மக்களிடம் 20.9 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இது 2017-18 நிதியாண்டின் பட்ஜெட்டிற்கான மதிப்புக்குச் சமமாகும்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், தயவுசெய்து 73 சதவிகிதத்தினர் சொத்து ஒரு சதவிகிதத்தினர் கைகளுக்கு சென்றது ஏன் என டாவோஸ் மாநாட்டில் சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: நீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here