மோடி அவர்களே ஐஏஎஸ் அதிகாரிகளை வேலைப் பார்க்க சொல்லுங்கள் – பிரகாஷ் ராஜ் கிண்டல் டிவீட்

0
316

நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தும் , பிரதமர் மோடியைக் கிண்டல் செய்தும் டிவீட் செய்துள்ளார்.

டியர் உயர்ந்த தலைவரே , நீங்கள் உடற்பயிற்சி சவாலிலும், யோகா செய்வதிலும் ரொம்பவே பரபரப்பாக இருப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் . எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி ஒரு ஆழந்த மூச்சு எடுத்துவிட்டு பின்னர் உங்களைச் சுற்றி பாருங்கள் . அதன்பிறகு டெல்லியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து வேலைப் பார்க்க சொல்லுங்கள் . உண்மையாகவே அர்விந்த் கெஜ்ரிவால் நாட்டின் நலனுக்காக வேலைச் செய்கிறார். உங்கள் கடமையைச் செய்யுங்கள் கிண்டலாக டிவீட் செய்துள்ளார் .

உங்கள் கடமையைச் செய்யுங்கள் என்றும் உங்கள் கடமையைச் செய்தால் நீங்கள் உடற்பயிற்சியும் செய்யலாம் என்றும் கிண்டலாக டிவீட் செய்துள்ளார்.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 7 நாட்களாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட அமைச்சர்கள் மணீஷ் ஷிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணைநிலை கவர்னர் வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க கர்நாடக, கேரள, ஆந்திரா, மேற்கு வங்க முதல்வர்கள் வந்தபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 4 மாநில முதல்வர்களும், கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் இவ்விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டுப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினும் அர்விந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடன் கவர்னர் வீட்டில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துணை முதல் மந்திரி மனிஷ் ஷிசோடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here