இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை குறித்த ஆய்வு ஒன்றை இந்திய அரசு வெளியிடாமல் புதைத்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஆய்வு முடிக்கப்பட்டு இந்திய அரசால் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின், குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை குறித்த தரவுகள் குறித்து ஆராய்ந்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். இந்தியாவில் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

நகர பகுதிகளில் 2017-18 தரவுகளின்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடி மட்டுமே. இது 2011 -2012-இல் 30.4 கோடியாக இருந்திருக்கிறது.

1993-94க்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்ற ஆண்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

3

நகர பகுதிகள் ஊரக பகுதிகள் என இரண்டிலும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என்று இந்த தரவுகள் மூலம் தெரியவருகிறது.

டிசம்பர் 2018-ஆம் ஆண்டு இந்த தரவு அறிக்கைக்கு ஆணையம் அனுமதி கொடுத்துவிட்ட நிலையில் அரசு இந்த வேலைவாய்ப்பு தரவு அறிக்கையை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தேசிய புள்ளியில் ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி மோஹனன் மற்றும் இந்த ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் ஜெ.வி.மீனாட்சி ஜனவரி மாத இறுதியில் பதவி விலகினர்.

ஊரக பகுதிகளில் பெண்கள் அதிகளவு வேலைவாய்ப்பை இழந்ததும், நகரப்பகுதிகளில் ஆண்கள் அதிகளவு வேலைவாய்ப்பை இழந்ததும் இந்த தரவுகள் மூலம் தெரியவருகின்றன.

ஊரக பகுதிகளில் 2011-12 மற்றும் 2017-18 இடையிலான காலகட்டத்தில் சுமார் 4.3 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பின்மை வீதம் 2011-2012 இல் 2.2 சதவீதமாக இருந்தது. தற்போது 6.1 சதவீதாக அதிகரித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

Courtesy : The Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here